அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, June 20, 2011

வாரச் சந்தை - 20.06.2011

தத்துவம் 
எது நடந்ததோ நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ நன்றாகவே நடக்கிறது, எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்...........ஆனா அதுக்கு வாழைப்பழத் தோலை ரோட்டில போடாம குப்பைத் தொட்டில போடணும்.

பொன்மொழி

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

- யாரோ சொன்னது!
(ஆனா, ஓட்டைப்பை இல்லாத சட்டையை கொடுத்து நல்லாவே உதவி செய்யலாம், - இது மட்டும் நான் சொன்னது,ஹிஹி!)
குவிஸ் 
ஒரு முட்டையை ஏழு அடி உயரத்திலிருந்து தரையில் போடணும், ஆனா உடையக் கூடாது, எப்படி?
(அது கஷ்டமே இல்லை, நிச்சயம் உடையாது, தரையைச் சொன்னேன்)
ஜோக்
"அந்த டாக்டர் ஒரு Blogger-னு எப்படி சொல்ற?"
"எனக்கு இருக்கற வியாதியை சொன்னபோது, same blood-னு சொல்லி சிரிக்கிறாரே!"
கவிதை
பந்தயத்தில்
தோற்றது 
முயல் - 
ஆமையால் அல்ல,
முயலாமையால்!

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

பொன்மொழி, தத்துவம், கவிதை பிடிச்சிருக்கு!

Madhavan Srinivasagopalan said...

எல்லாமே சூப்பர்..
-- படிக்க நேரமில்லாமல் கமெண்டு போடுவோர் சங்கம்..

சி.பி.செந்தில்குமார் said...

இனி நாமளும் ரெகுலரா இங்கே வருவோம்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்களும் போடுவோம்ல .... கமெண்ட்டு......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாங்களும் போடுவோம்ல .... கமெண்ட்டு......!(நகல் & பசை)

வெங்கட் said...

@ சிபி.,

// இனி நாமளும் ரெகுலரா இங்கே
வருவோம்ல //

ஐய்யோ... நீங்க இனிமே ரெகுலரா
வருவீங்களா..! மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...

அருண் பிரசாத் said...

வார சந்தை அருமைதான்...என்ன இன்னும் கொஞ்சம் சரக்குகள் இருந்து இருக்கலாம் பெ சோ வி

ஜெட்லி... said...

:))

cho visiri said...

// முயல் -
ஆமையால் அல்ல,
முயலாமையால்! //

Do you mean the race?

Let me tell you a fact....

Effortlessly Rabbit is first and Tortoise is the latter (no spelling mistake) - in English Dictionary...

and in Tamil Dictionary, it is vice versa.