அன்று என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். குழந்தைகள் இருந்ததால், பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டு சென்றேன். என்னைக் கண்டு "அடடே, வாடா, என்னடா, ரொம்ப நாள் ஆச்சு, பார்த்து?" என்று வாய் நிறைய வரவேற்றான்.
"சும்மா இந்த பக்கம் வந்தேன், அப்படியே உன்னையும் பார்த்து விட்டு வரலாம் என்றுதான்........." என்று சொல்லி பழம், பூ இருந்த பையை அவனிடம் கொடுத்தேன். அவனுடைய ஏழு வயது பையனிடம் பிஸ்கட்டைக் கொடுத்தேன்.
கொடுத்தவுடனேயே அவன் என்னைப் பார்த்து, "தேங்க்ஸ் மாமா, ஆனா இந்த ஒரு பாக்கெட் எனக்கு போதாதே!" என்றான். உடனே என் நண்பன் "அவன் அப்படிதாண்டா, உன்னை மாதிரியே ஓப்பன் டைப்" என்று இளித்தான்.
"அடப் பாவி, நான் என்னிக்குடா பிஸ்கட்டுக்கு பறந்தேன்?" என்று கேட்க நினைத்தேன், ஆனால், போகட்டும் என்று விட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் ஆச்சு, பையன் அப்பாகிட்ட வந்தான், "அப்பா, கிரிக்கெட் பேட் கேட்டிருந்தேனே, என்ன ஆச்சு?" என்றான். என் நண்பன், "கொஞ்ச நாள் போகட்டும் கண்ணு, அப்புறம் வாங்கித் தரேன்" என்று சொல்ல, வந்ததே கோபம், பையனுக்கு,"இப்பவே வாங்கித் தரனும், இல்ல.........."என்று சொன்னபடியே கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டால் அவனை அடித்தான். "இவன் எப்பவுமே இப்படிதான், ரொம்ப கோபம் வந்துடும்"என்று என்னிடம் சொன்னான்.
"என்னடா, இது? பையனைக் கொஞ்சம் கவனிச்சு வளர்க்கனும்டா, இப்படியே விட்டா, ரொம்ப பிடிவாதம் வந்துடும். அப்புறம் வளர்ந்தப்புறம் முரடனா வரப் போறான்டா, பார்த்துக்க! செல்லம் கொஞ்ச வேண்டியதுதான், ஆனா, அப்பப்ப கஷ்டத்தையும் கத்துக் குடுடா" என்று என் நண்பனிடம் சொன்னேன்.
"இதோ பாரு, என் பையனை நான் எப்படி வளர்க்கனும்னு நீ சொல்ல வேண்டியதில்லை, அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம்" என்று கோபமாகவே சொல்லிவிட்டான். "நமக்கு என்ன ஆச்சு"ன்னு நானும் அது பற்றி பிறகு பேசவே இல்லை.
இப்ப சொல்லுங்க, என் நண்பன் செய்வது சரியா?
டிஸ்கி: தலைப்புக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு: என் நண்பன் காலேஜ் நாட்களில் ரொம்பவே இங்கிலீஷ் பேசியதால், அவனை நாங்கள் எல்லோரும் "அமெரிக்கா" என்றுதான் அழைப்போம்.
டிஸ்கிக்கு டிஸ்கி: ஒபாமா, ஒசாமா, இஸ்ரேல் என்று வேறு எதைப் பற்றியாவது இருக்கும் என்று நினைத்து வந்தவர்களுக்கு : "ஐ ஆம் சாரி"

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
அமெரிக்கா செய்வது கொஞ்சம் கூட சரியில்லை...
கமாண்டுக்கு டிஸ்கி : பிள்ளைகளை கொஞ்சம் கண்டிப்புடன் வளர்த்து ஆளாக்க வேண்டும் எந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டுமோ அந்த விஷயத்தில் தான் விட்டுக்கொடுக்க வேண்டும்...
சிறு வயதில் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தால் அது பின்னாளில் அவனுக்கு பேருதவியாக இருக்கும்...
"அமெரிக்கா"?"ஐ ஆம் சாரி"ஏனுங்க,ஏன்?
// "..குழந்தைகள் இருந்ததால், பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டு சென்றேன்." & "... பழம், பூ இருந்த பையை அவனிடம் கொடுத்தேன்." //
'பூ', உங்க வீட்டுலேருந்து எடுத்திட்டுப் போனீங்களா.. ? (வாங்கினா மாதிரி தெரியலை..)
நல்லா கிளப்புறாங்கய்ய பீதியை
சிறுதுகண்டிப்புடன் தான் வளர்த்தவேண்டும்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html
//அன்று என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். குழந்தைகள் இருந்ததால், பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டு சென்றேன்//
இந்த நல்ல பழக்க்கமெல்லாம் இருக்கா? சொல்லவே இல்ல?
அந்த பையன் எனக்கு பிடிக்காது பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டிஎன்னு உங்க மூஞ்சில அந்த பாக்கெட்டை தூக்கி எறிஞ்சத சொல்லவே இல்லை?
முடியல...
Post a Comment