இப்போது எங்கு பார்த்தாலும் ஊழல் பற்றித் தான் பேச்சு!
அன்னா ஹசாரே மாதிரி ராம் தேவும் உண்ணா விரதம் நடத்தினார். "எல்லாரும் சொல்றா மாதிரி ஊழலை அவ்வளவு ஈசியா ஒழிக்க முடியாது" அப்படின்னு பிரதமரே சொல்றார், என்ன செய்ய?
அது போகட்டும், ஊழலை ஒழிக்க முடியாது வேணும்னா குறைக்க செய்யலாம் என்று கூட சிலர் சொல்றாங்க, அதாவது நடக்கக் கூடியதா?
"இந்த நாட்டில மட்டுமில்ல, எந்த நாட்டிலேயும் ஊழலை ஒழிக்க முடியாது" என்று வாதம் செய்பவர்களும் இருக்காங்க, இல்லையா?
சரி, விடுங்க. சுலப முறையில் ஊழலை கண் காணாமல் செய்ய ஒரு வழி இருக்கிறது.
அந்த சுலபமான வழி......
......
...
......
......
......
......
ஊழல்னு எழுதும்போது, பேக் கிரௌண்ட் என்ன கலர்ல இருக்கோ, அந்த கலர்ல எழுதினா ஊழல் கண்ணுக்குத் தெரியவே தெரியாது, உதாரணமா, வெள்ளை கலர் போர்டில வெள்ளை கலர்லயும், கருப்பு போர்டில கருப்பு கலரிலும், பச்சை போர்டில் பச்சை கலரிலும் எழுதணும். சோ, ஊழலை கண் காணாம செய்துடலாம், எப்புடீ?
அதெல்லாம் வேணாம், ஊழலைக் குறைச்சா போதும்னு சொல்றவங்களுக்கு, ஊழலைப் படிப் படியா குறைக்க வழி கீழே:
ஊழல்
ஊழல்
ஊழல்
ஊழல்
ஊழல்
எப்புடீ, படி படியா ஊழலைக் "குறைச்சுட்"ட்டோமில்ல?
ஊழல்
15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
உங்க பதிவையும் வெள்ளை எழுத்துல, வெள்ளை பின்புலத்துல எழுதினா நல்லா இருக்கும்(மத்தவங்களுக்கு) .. எப்படி இந்த ஐடியா ?
படிப்படியா குறைக்கிறேன்னு சொன்னீங்க, எங்க படிய காணோம்?
//////ஊழல்னு எழுதும்போது, பேக் கிரௌண்ட் என்ன கலர்ல இருக்கோ, அந்த கலர்ல எழுதினா ஊழல் கண்ணுக்குத் தெரியவே தெரியாது, உதாரணமா, வெள்ளை கலர் போர்டில வெள்ளை கலர்லயும், கருப்பு போர்டில கருப்பு கலரிலும், பச்சை போர்டில் பச்சை கலரிலும் எழுதணும். ///////
இதுக்கு பேசாம ஒரு ரப்பர் வெச்சு அழிச்சிடலாம்.........
பேசாம ஊழல்-ன்ற வார்த்தைய ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடலாம் (அகராதியில இருந்து தூக்கிடலாம்)..
@பன்னிக்குட்டி
//படிப்படியா குறைக்கிறேன்னு சொன்னீங்க, எங்க படிய காணோம்?//
ROTFL :)
//இதுக்கு பேசாம ஒரு ரப்பர் வெச்சு அழிச்சிடலாம்......... //
உருவாகும்போதே தெரியாம (அழிக்கப்பட) இருக்குறதுக்குத்தான், அப்படி சொன்னாரோ பெ.சோ.வி.
ஏற்கெனவே ஊழலால மனுஷன் நொந்துபோய் இருக்கான் ......இது போதாதுன்னு நீங்க வேற ....
உன்ன போல புத்திசாலிய நான் பத்தாதே இல்ல
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
படிப்படியா குறைக்கிறேன்னு சொன்னீங்க, எங்க படிய காணோம்//
ஊழலை ஒழிக்கிறதுக்கு முதல் படியா "படி"யை ஒழிசுட்டோம், ஹிஹி!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கு பேசாம ஒரு ரப்பர் வெச்சு அழிச்சிடலாம்.........
//
உண்மைதான், ஆனா அந்த ரப்பர் வாங்கறதிலேயும் ஊழல் வந்துட்டா என்ன பண்றது? அதான், அந்த யோசனை சரியா வராது!
//அனு said...
பேசாம ஊழல்-ன்ற வார்த்தைய ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடலாம் (அகராதியில இருந்து தூக்கிடலாம்)..
//
இதைதான் சரியான அகராதின்னு சொல்றது!
:)
//Madhavan Srinivasagopalan said...
உருவாகும்போதே தெரியாம (அழிக்கப்பட) இருக்குறதுக்குத்தான், அப்படி சொன்னாரோ பெ.சோ.வி.
//
கககபோ
mind voice: நம்ம எழுதறதிலேயும் அர்த்தம் இருக்குன்னு நம்..............பி படிக்கிறாங்களேப்பா!
//koodal bala said...
ஏற்கெனவே ஊழலால மனுஷன் நொந்துபோய் இருக்கான் ......இது போதாதுன்னு நீங்க வேற ....
//
ஊழலில் திளைத்த பலரும் "ஊழலை ஒழிப்பதே எங்கள் கொள்கை"னு சொல்லும்போது நொந்து போன மனுஷன் எழுதினதுன்னு ஆறுதல் பட்டுக்கோங்க!
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
உன்ன போல புத்திசாலிய நான் பத்தாதே இல்ல
//
ஹிஹி!
(ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்து எழுதுப்பா!)
ஒரு பெரிய ரப்பர் வெச்சி அழிச்சிடுங்க ஊழல் ஒழிஞ்சிடும்
ஒரு உலகளாவிய சட்டம் போட்டு, ஊழல், லஞ்சம் இம்மாதிரி வார்த்தைகளின் அர்த்தத்தை அகராதியிலேயே மாத்திப்புடலாம்!!
Post a Comment