அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 6, 2011

பெண்ணால் வந்த வினை

அப்ப நான் பத்தாவது படிச்சுகிட்டிருந்தேன்.(இப்ப வரைக்கும் அதுதான் படிச்சிருக்கே என்று யாரும் சொல்ல வேண்டாம், அது பழைய்..........................ய ஜோக்) 
கிளாஸ்ல நாலு பேர் பெண்கள், நாங்க நாப்பது பேர் ஆண்கள். படிப்புல அவ்வளவா கிரேட்னு சொல்ல முடியாட்டாலும் (பின்ன வெங்கட் மாதிரி பொய் தம்பட்டம் அடிக்க தெரியாதுல்ல) பொதுவாகவே பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் படிப்புல மட்டும் ஒரு போட்டி இருந்துகிட்டே இருக்கும். நம்மால முடியாட்டாலும், இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க, அதை வார்த்தையால வர்ணிக்க முடியாது.
விஷயத்துக்கு வருவோம் (நாம எந்தக் காலத்துல முதல் பாராவுலயே விஷயத்துக்கு வந்திருக்கோம்?) ஸ்கூல் ஆரம்பிச்சு ஒரு மூணு மாசத்துல கணக்கு டெஸ்ட் வச்சாங்க. அதுல ஐயா தான் இருபதுக்கு இருபது. மத்தவங்களாம் இருபதுக்கு கீழேதான். பசங்கல்லாம் என்னை பாராட்டித் தள்ளிட்டாங்க. (பசங்க என்பது இரண்டு பேரை மட்டுமே குறிக்கும், அதுவும் என் பக்கத்துல இருந்த பசங்க

காலாண்டுத் தேர்வு வந்தது. இந்தத் தேர்வுலயும் கணக்குல முதல் மார்க் எடுக்கனும்னு நான் முடிவு பண்ணினேன்(அப்ப மத்த சப்ஜெக்ட்? அதையும் நாமளே கையில எடுத்தா எப்படி, மத்தவங்களுக்கு விட்டுக் குடுக்கனுமில்ல?ஹிஹி). நல்லா படிச்சேன். (கணக்குப் பாடம் படிக்கறதா? அது போட்டுப் பார்க்கறதுதானே அப்படின்னு டெரர் கேக்கலாம்) பரீட்சைக்கு போனேன்.  பாதி எழுதிகிட்டு இருக்கும்போது திடீர்னு இங்க்  பேனா மக்கர் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. இங்க்தான் சரியா வரலையோன்னு நினைச்சு பேனாவ ஒதறினேன் பாருங்க, டெஸ்க்ல "நிப்" பட்டு பேனா பணால். வேற பேனாவும் கொண்டு போகல, அவ்வளவுதான். ரிசல்ட் வந்தா ஜஸ்ட் பாஸ். சரி, அடுத்த பரீட்சைல பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

என்ன செய்ய? கணக்குல குறைவா மார்க் எடுத்ததுக்கு காரணம், அந்தப் பேனா தான். எல்லாம் penணால் வந்த வினை!

டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!

டிஸ்கிக்கு டிஸ்கி: உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.   

30 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

பேசாம பெண்சில் கொண்டு போயிருக்கலாம்!

எஸ்.கே said...

//பசங்க என்பது இரண்டு பேரை மட்டுமே குறிக்கும், அதுவும் என் பக்கத்துல இருந்த பசங்க// இது நைஸ்:-)

Chitra said...

உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

..... மாதவன் சாருக்கு அந்த "நிப்" உடைந்த பேனாவை "பரிசாக" வழங்குகிறோம். :-)))

Madhavan Srinivasagopalan said...

// டிஸ்கிக்கு டிஸ்கி: உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். //

நா அப்படி சொன்னேனா..?
ஞாபகம் இல்லையே..!

மாணவன் said...

// (கணக்குப் பாடம் படிக்கறதா? அது போட்டுப் பார்க்கறதுதானே அப்படின்னு டெரர் கேக்கலாம்) //

ஹிஹி...டெரர் ராக்ஸ் :)

மாணவன் said...

//டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!///

ம்ம்...வெளங்கிருச்சு... :)

சாந்தி மாரியப்பன் said...

மொக்கை ரொம்ப நல்லாருக்கு :-)

rajamelaiyur said...

//
டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!
//

என்ன சிரிப்பு

அனு said...

// pen -ஐ "பெண்"னு சொல்லக் கூடாதா?//

அதனால தான் அது பெண்களுக்கு சப்போர்ட்டா வேலை செஞ்சது போல.. :)

வெங்கட் said...

// அதுல ஐயா தான் இருபதுக்கு இருபது.
பசங்கல்லாம் என்னை பாராட்டித் தள்ளிட்டாங்க. //

" ஐயா " இருபதுக்கு இருபது எடுத்ததுக்கு..
உங்களை ஏன் எல்லோரும் பாராட்டணும்..?

ஒண்ணும் விளங்கலியே..?!!!!

வெங்கட் said...

@ அனு.,

// அதனால தான் அது பெண்களுக்கு
சப்போர்ட்டா வேலை செஞ்சது போல.. :) //

அதானே ஆண்களுக்கு Pen இப்படி
சதி பண்ணினா தானே பெண்கள்
எல்லாம் 1st Mark எடுக்க முடியும்..?!

பெசொவி said...

//வெங்கட் said... 10
// அதுல ஐயா தான் இருபதுக்கு இருபது.
பசங்கல்லாம் என்னை பாராட்டித் தள்ளிட்டாங்க. //

" ஐயா " இருபதுக்கு இருபது எடுத்ததுக்கு..
உங்களை ஏன் எல்லோரும் பாராட்டணும்..?

ஒண்ணும் விளங்கலியே..?!!!!
//

அதெல்லாம் படிச்சவங்களுக்குத் தான் விளங்கும், நீங்க வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்?

பெசொவி said...

/Madhavan Srinivasagopalan said...
// டிஸ்கிக்கு டிஸ்கி: உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். //

நா அப்படி சொன்னேனா..?
ஞாபகம் இல்லையே..!
//
"எனக்கு வர வர ஞாபக மறதி அதிகம்"னு கூடத் தான் சொன்னீங்க, அதுவும் மறந்து போயிருக்குமே!

பெசொவி said...

//Chitra said...
உங்க ப்ளாகில மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு ஞாபகப் படுத்தின மாதவனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

..... மாதவன் சாருக்கு அந்த "நிப்" உடைந்த பேனாவை "பரிசாக" வழங்குகிறோம். :-)))
//

ha...ha...ha!
Chitra rocks!

பெசொவி said...

//எஸ்.கே said...
பேசாம பெண்சில் கொண்டு போயிருக்கலாம்!
//

பெண்சில்னா என்ன? ப்ரிஜ்ஜில வச்ச "பெண்"ணா?

பெசொவி said...

//மாணவன் said...
//டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!///

ம்ம்...வெளங்கிருச்சு... :)
//

வெளங்கல!

பெசொவி said...

//என் ராஜபாட்டை"- ராஜா said...
//
டிஸ்கி: pen -ஐ "பென்"னுதான் சொல்லனுமா, "பெண்"னு சொல்லக் கூடாதா? அதான் தலைப்பு அப்படி போட்டேன், ஹிஹி!
//

என்ன சிரிப்பு
//

இது புன்சிரிப்பு அல்ல penசிரிப்பு :))

பெசொவி said...

//அமைதிச்சாரல் said...
மொக்கை ரொம்ப நல்லாருக்கு :-)
//

:)))

பெசொவி said...

//அனு said...
// pen -ஐ "பெண்"னு சொல்லக் கூடாதா?//

அதனால தான் அது பெண்களுக்கு சப்போர்ட்டா வேலை செஞ்சது போல.. :)
//

பெண் புத்தி pen புத்தினு காமிச்சுட்டீங்க!

இம்சைஅரசன் பாபு.. said...

எப்போதும் போல ஓட்டு மட்டும் போட்டுக்கிட்டு போக வேண்டியது தானே ..பதிவ படிப்பியா ...படிப்பியா ..?(நான் என்னை சொன்னேன் ..)

TERROR-PANDIYAN(VAS) said...

//இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க//

தூள் மச்சான் கலக்கிட்ட அப்படினு அவன் எதிரியா இருந்தாலு பாராட்டுவோம். ஒரு முறை என்னோட க்ளாஸ்ல படிச்ச 13 பொண்ணும் பெயில். அந்த சந்தோஷத்துல நான் பெயிலானது கூட மறாந்து போச்சி.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

pen போச்சு, ஓகே ஆனா பெண்ணால் என்ன ஆச்சுன்னு கடைசி வரை சொல்லவே இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தது நாலு பொண்ணுங்க, நாலையும் பிரண்டு ஆக்கிட்டா இந்த பிரச்சனையே வராது பாருங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹையோ ரமா... ச்சே ராமா?

பனித்துளி சங்கர் said...

நகைச்சுவை ததும்பும் பதிவு அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said... 21

//இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க//

தூள் மச்சான் கலக்கிட்ட அப்படினு அவன் எதிரியா இருந்தாலு பாராட்டுவோம். ஒரு முறை என்னோட க்ளாஸ்ல படிச்ச 13 பொண்ணும் பெயில். அந்த சந்தோஷத்துல நான் பெயிலானது கூட மறாந்து போச்சி.... :))//

நீ மட்டும்தான் மக்குன்னு நினைச்சேன். உன் கூட படிச்ச எல்லோரும் மக்குதானா?

பெசொவி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
TERROR-PANDIYAN(VAS) said... 21

//இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க//

தூள் மச்சான் கலக்கிட்ட அப்படினு அவன் எதிரியா இருந்தாலு பாராட்டுவோம். ஒரு முறை என்னோட க்ளாஸ்ல படிச்ச 13 பொண்ணும் பெயில். அந்த சந்தோஷத்துல நான் பெயிலானது கூட மறாந்து போச்சி.... :))//
நீ மட்டும்தான் மக்குன்னு நினைச்சேன். உன் கூட படிச்ச எல்லோரும் மக்குதானா?//

இதில என்னய்யா சந்தேகம், அவன் கூட ஒட்டியிருக்கற VAS பட்டத்த பார்த்தப்புறமும் இப்படி ஒரு கேள்வி கேக்கலாமா?

கௌதமன் said...

பெண்ணைக் குற்றம் சொல்லாதீர்கள். பெண் பாவம் பொல்லாதது. நான் pen என்றுதான் டைப் செய்தேன்; கூகிள தான் பெண் என்று காட்டுகிறது.

gayathri said...

TERROR-PANDIYAN(VAS) said...

//இன்னொரு பையன் நிறைய மார்க் எடுத்து பொண்ணுங்களைப் பின்னுக்குத் தள்ளிட்டா அதுல ஒரு சந்தோசம் இருக்கும் பாருங்க//

தூள் மச்சான் கலக்கிட்ட அப்படினு அவன் எதிரியா இருந்தாலு பாராட்டுவோம். ஒரு முறை என்னோட க்ளாஸ்ல படிச்ச 13 பொண்ணும் பெயில். அந்த சந்தோஷத்துல நான் பெயிலானது கூட மறாந்து போச்சி.... :))

payapullaiiku santhosatha paru pichiduven pichi raskal

Anonymous said...

தலைப்பு தப்பே இல்ல.... போஸ்ட் ஏமாத்தல.... க்ளாஸ்ல இருக்கற நாலு பெண்ண டாமினேட் பன்ன நெனச்சதால அந்த அவசரத்துல இன்னொரு பென்ன எடுத்துட்டு போக மறந்து ஜஸ்ட் பாஸ் ஆனதுக்கு காரணம் அந்த பெண் தானே... :)

நட்பின் தின வாழ்த்துக்கள்