அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, June 18, 2011

நெல்லை பதிவர் சந்திப்பு

நேற்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இதுவரை இணையம் மூலம் மட்டுமே சந்தித்து வந்த பலரையும் முன் பின் பழக்கம் இல்லாத சிலரையும் சந்திக்க முடிந்தது.
நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பு மிக அமைதியாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது.

விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.

  • பத்து மணிக்கு ஆரம்பிப்பது என்று முடிவு செய்ததால், இந்திய வழக்கப் படி பத்து பத்துக்கே நான் சென்று விட்டேன்; மீட்டிங்கும் சரியாக பதினோரு மணிக்கெல்லாம் முறைப்படி(?) தொடங்கியது.
  • சங்கரலிங்கம் எல்லோரையும் வரவேற்றார், ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.
  • வலையுலகத்துக்கு நன்கு பரிச்சயமான வலைச்சரம் சீனா ஐயா வந்திருந்தார்.
  • விவசாய உலகத்துக்கு நல்ல யோசனைகளை சொல்லி வரும் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்களும் வந்திருந்தார் 
  • சி.பி. செந்தில்குமாரை காப்பி பேஸ்ட் செந்தில்குமார் என்று கிண்டலோடு வரவேற்றார் சங்கரலிங்கம்.
  • நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல காப்பி பேஸ்ட் செய்வதில் தப்பில்லை என்று எடுத்துரைத்தார் செந்தில். (என்னுடைய அபிப்ராயமும் அதுதான்)
  • பிரபல பதிவர் தண்டோரா மணிஜி அவர்களும் வந்திருந்தார்.
  • பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை செய்யலாம் என்று யோசனை தந்தார் ஐயா சீனா அவர்கள்.
  • பதிவுலகில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் சிலர் தங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சகோதரி சித்ரா
  • பல விஷயங்களை இழந்துவிட்ட சோகத்தை ப்ளாக் மூலம் ஆற்றிக் கொள்ள முடிகிறது என்று ப்ளாகின் நல்ல பக்கத்தை விளக்கினர், ஜோசபினும் கல்பனாவும்.
மொத்தத்தில் மிக அருமையான சந்திப்பு அது. நான் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பும் அதுதான். இதுபோல் இன்னும் பல பதிவுலக சொந்தங்களை நேரில் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறது, பார்ப்போம், எல்லாம் இறைவன் கருணை!
சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்த சகோதரி கௌசல்யா அன்புத் தம்பி பாபு, அண்ணன் சங்கரலிங்கம் மற்றும் நாஞ்சில் மனோவுக்கும் என் நன்றிகள்! 
டிஸ்கி : நான் என்ன கருத்துகளைக் கூறினேன் என்பதை மற்றவர்கள் ப்ளாகில் எழுதட்டும் என்று விட்டு விட்டேன். (நான் ஒரு தடவை சொன்னா, அதுக்கப்புறம் நானே என் பேச்சை மறந்துவிடுவேன், ஹிஹி) 

டிஸ்கிக்கு டிஸ்கி : ஜோக் என்ற பெயரில் செல்வா என்னவோ சொன்னான், அது பற்றி அவனே சொல்லட்டும்.(என்ன இருந்தாலும், மத்தவங்களை நாம குறை சொல்லக் கூடாதுல்ல!):

68 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க

வெங்கட் said...

// நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பு
மிக அமைதியாகவும், உற்சாகமாகவும்
நடைபெற்றது. //

ஆச்சரியமா இருக்கு...

நீங்க கலந்துகிட்டதுக்கு அப்புறமும்
பதிவர் சந்திப்பு மிக அமைதியாகவும்,
உற்சாகமாகவும் நடைபெற்று
இருக்கு..?!!!!???

வெங்கட் said...

// பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை
வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை
செய்யலாம் என்று யோசனை தந்தார்
ஐயா சீனா அவர்கள். //

ஆனா இதுக்காக நீங்க ரொம்ப
கஷ்டப்பட வேணாம்..

நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// செல்வா வாழ்க செல்வா வாழ்க
செல்வா வாழ்க செல்வா வாழ்க //

ஏம்பா செல்வா..! நம்ம ரமேஷ்க்கு
அஞ்சோ., பத்தோ பாத்து சீக்கிரம்
போட்டு குடுப்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும்,//

எழுதிட்டாலும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

// பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை
வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை
செய்யலாம் என்று யோசனை தந்தார்
ஐயா சீனா அவர்கள். //

ஆனா இதுக்காக நீங்க ரொம்ப
கஷ்டப்பட வேணாம்..

நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..//

Same 2 u Venkat

இம்சைஅரசன் பாபு.. said...

//விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.//

ஏன் சார் ...இப்படி கோர்த்து விடுறீங்க ..நான் எங்க எழுத ...

வெங்கட் said...

// நான் என்ன கருத்துகளைக் கூறினேன்
என்பதை மற்றவர்கள் ப்ளாகில்
எழுதட்டும் என்று விட்டு விட்டேன். //

என்ன பெரிய கருத்து..?

" சாப்பாடு நல்லா இருக்குன்னு "
பாபுகிட்ட சொன்னீங்களாம்..
அதானே..?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// செல்வா வாழ்க செல்வா வாழ்க
செல்வா வாழ்க செல்வா வாழ்க //

ஏம்பா செல்வா..! நம்ம ரமேஷ்க்கு
அஞ்சோ., பத்தோ பாத்து சீக்கிரம்
போட்டு குடுப்பா..//

போட்டுகொடுக்குரதேல்லாம் ஒரு பொழப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது நீங்களும் பதிவரா? சொல்லவே இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.//

ஏன் சார் ...இப்படி கோர்த்து விடுறீங்க ..நான் எங்க எழுத ...//

போய் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுது

மாணவன் said...

சந்திப்புகள் இனிமையாய் நிறைவு பெற்றதற்கு வாழ்த்துக்கள் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.//

ஏன் சார் ...இப்படி கோர்த்து விடுறீங்க ..நான் எங்க எழுத ...
////////

இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா, படுவா இவரு எழுதுறதுக்காக ஏவிஎம் ஸ்டூடியோவையா வாடகைகு எடுக்க முடியும்? போயி ப்ளாக்க ஓப்பன் பண்ணி வெச்சு எழுதுவியா, அத விட்டுப்புட்டு.....

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னது நீங்களும் பதிவரா?
சொல்லவே இல்ல? //

அவர் பதிவர்னு எப்பங்க சொன்னாரு..?

இவரு மைக் செட் கடை வெச்சி
இருக்காரு..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : நான் என்ன கருத்துகளைக் கூறினேன் என்பதை மற்றவர்கள் ப்ளாகில் எழுதட்டும் என்று விட்டு விட்டேன்.//////

ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// என்னது நீங்களும் பதிவரா?
சொல்லவே இல்ல? //

அவர் பதிவர்னு எப்பங்க சொன்னாரு..?

இவரு மைக் செட் கடை வெச்சி
இருக்காரு..!////////

ஓ மேட்டர் அப்படியா?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போய் தஞ்சாவூர் கல்வெட்டுல
எழுது //

ஆமா.. அது பக்கத்துல நின்னு
போட்டோ பிடிச்சி.. அதை பதிவுன்னு
ரமேஷ் போடுவாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க/////////

இந்த அல்லக்கைகள் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்குப்பா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
// பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை
வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை
செய்யலாம் என்று யோசனை தந்தார்
ஐயா சீனா அவர்கள். //

ஆனா இதுக்காக நீங்க ரொம்ப
கஷ்டப்பட வேணாம்..

நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..
///////

உங்களுக்கு அந்தமாதிரி சேவை, இடியாப்பம், பணியாரம் செய்யற ஐடியா எதுவும் இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க/////////

இந்த அல்லக்கைகள் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்குப்பா........//

போய் தொலை

பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும்,//

எழுதிட்டாலும்?///////

அத படிச்சிட்டாலும்........?

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 1
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க
//

அடப் பாவி, நம்ம ப்ளாகில வந்து VAS மெம்பருக்கு வாழ்க போடறியே, மாமூல் அதிகமா வாங்கிட்டியா?

பெசொவி said...

// வெங்கட் said...

ஆச்சரியமா இருக்கு...

நீங்க கலந்துகிட்டதுக்கு அப்புறமும்
பதிவர் சந்திப்பு மிக அமைதியாகவும்,
உற்சாகமாகவும் நடைபெற்று
இருக்கு..?!!!!???
//

அதுக்கு காரணம் இருக்கு, நான் போயி சொன்ன முதல் செய்தியே, இந்த சந்திப்புக்கு வெங்கட் வர மாட்டாருன்னுதான், அதான் மொத்தக் கூட்டமும் உற்சாமா ஆயிட்டாங்க!

பெசொவி said...

// வெங்கட் said...

நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..
//

கமென்ட் போட வந்துட்டு ஏதோ தனக்குத் தானே பெசிகிட்டீங்க, போல?

பெசொவி said...

//வெங்கட் said...

ஏம்பா செல்வா..! நம்ம ரமேஷ்க்கு
அஞ்சோ., பத்தோ பாத்து சீக்கிரம்
போட்டு குடுப்பா..
//

இப்படி அஞ்சு பத்து கொடுத்துதான் உங்க VAS-ல செல்வாவை சேர வச்சீங்களோ?

பெசொவி said...

// விக்கியுலகம் said...
nice view
//

thanks!

பெசொவி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.//

ஏன் சார் ...இப்படி கோர்த்து விடுறீங்க ..நான் எங்க எழுத ...
//

அட, என்ன பாபு இது? எப்பவும் உங்க பொண்ணுகிட்ட வாங்கின பல்பு பத்தி எழுதுவீங்க, ஒரு மாறுதலுக்கு நேத்து மீட்டிங்க்ல என் கிட்ட வாங்கின பல்பு பத்தி எழுத வேண்டியதுதானே?

பெசொவி said...

// வெங்கட் said...
// நான் என்ன கருத்துகளைக் கூறினேன்
என்பதை மற்றவர்கள் ப்ளாகில்
எழுதட்டும் என்று விட்டு விட்டேன். //

என்ன பெரிய கருத்து..?

" சாப்பாடு நல்லா இருக்குன்னு "
பாபுகிட்ட சொன்னீங்களாம்..
அதானே..?!
//


நான் முன்னாடியே சொல்லிட்டேன், வெங்கட் போன் பண்ணி "சாப்பாடு எப்படி இருந்தது"ன்னு கேப்பாரு, நீங்களும், "பெசொவியே சொன்னாரு, சாப்பாடு நல்லா இருந்துச்சு"ன்னு சொல்லுங்க, அப்பத்தான் போகாம இருந்துட்டோமேன்னு வெங்கட்டும் வருத்தப் படுவாருன்னு.
அப்படியே உங்ககிட்ட சொல்லிட்டாரு, போல!

பெசொவி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said...

@ ரமேஷ்.,

ஏம்பா செல்வா..! நம்ம ரமேஷ்க்கு
அஞ்சோ., பத்தோ பாத்து சீக்கிரம்
போட்டு குடுப்பா..//

போட்டுகொடுக்குரதேல்லாம் ஒரு பொழப்பா?
//

ha....ha....ha....
police rocks!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது நீங்களும் பதிவரா? சொல்லவே இல்ல?
//

ஆமா, நானும் பதிவர்தான், ஆனா பதிவர்கள் கிட்டதான் சொல்லுவேன், அதான்!

பெசொவி said...

//மாணவன் said...
சந்திப்புகள் இனிமையாய் நிறைவு பெற்றதற்கு வாழ்த்துக்கள் :)
//

இது ஒரு கூட்டு முயற்சி, அனைவருக்கும் இதில் பங்குண்டு!

பெசொவி said...

//வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// என்னது நீங்களும் பதிவரா?
சொல்லவே இல்ல? //

அவர் பதிவர்னு எப்பங்க சொன்னாரு..?

இவரு மைக் செட் கடை வெச்சி
இருக்காரு..!
//

"பதிவர்னா ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல வேலை பாக்கறவரு தான?"ன்னு என்கிட்டே கேள்வி கேட்டவரு நீங்கதான்னு பன்னிகுட்டி கிட்ட சொல்ல மாட்டேன், வெங்கட்! கவலைப் படாதீங்க!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////டிஸ்கி : நான் என்ன கருத்துகளைக் கூறினேன் என்பதை மற்றவர்கள் ப்ளாகில் எழுதட்டும் என்று விட்டு விட்டேன்.//////

ஏன் இந்த வெளம்பரம்?
//

அந்த மீட்டிங்குல எல்லாரையும் கவர்ந்தது என் பேச்சுதான்னு நானே சொல்லிகிட்டா, அது விளம்பரம் ஆகிடும், அதான், இப்படி, ஹிஹி!

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

//விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.//

ஏன் சார் ...இப்படி கோர்த்து விடுறீங்க ..நான் எங்க எழுத ...//

போய் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுது
//

பக்கத்துலேயே உக்காந்துக்க ஆள் வேணும்னா, ரமேஷ் இருக்காரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பெசொவி said... 33
//வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// என்னது நீங்களும் பதிவரா?
சொல்லவே இல்ல? //

அவர் பதிவர்னு எப்பங்க சொன்னாரு..?

இவரு மைக் செட் கடை வெச்சி
இருக்காரு..!
//

"பதிவர்னா ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல வேலை பாக்கறவரு தான?"ன்னு என்கிட்டே கேள்வி கேட்டவரு நீங்கதான்னு பன்னிகுட்டி கிட்ட சொல்ல மாட்டேன், வெங்கட்! கவலைப் படாதீங்க!//////////

அப்போ நீங்க மைக்செட் ஆள்கூட இல்லியா? அப்போ எப்படி மீட்டிங்ல?

பெசொவி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க/////////

இந்த அல்லக்கைகள் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்குப்பா........//

போய் தொலை

பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
பன்னி வாழ்க
//

இந்தப் பொழப்புக்கு....................

பெசொவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வெங்கட் said...
// பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை
வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை
செய்யலாம் என்று யோசனை தந்தார்
ஐயா சீனா அவர்கள். //

ஆனா இதுக்காக நீங்க ரொம்ப
கஷ்டப்பட வேணாம்..

நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..
///////

உங்களுக்கு அந்தமாதிரி சேவை, இடியாப்பம், பணியாரம் செய்யற ஐடியா எதுவும் இல்லியா?
//

அந்த ஐடியா சீனா ஐயாவுக்கு இருக்கறதாலதான், வெங்கட்டை இது வரைக்கும் வலைச்சரம் ஆசிரியரா இருக்க சொல்லலை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நறுக்குன்னு எழுதியிருக்கிங்க...போதுமா?

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்னய்யா அவசரமா அவசரமா எழுதி போட்டுட்டு வேலைக்கு ஓடிட்டீரா என்ன ஹி ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

ஏய் பன்னி, பிச்சிபுடுவேன் பிச்சி.... ஒரு வாழ்த்து சொல்லும்யா....

மாதேவி said...

பதிவர் சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

என்னை தனியாக குற்றாலத்தில் விட்டுட்டு ஓடிப்போன செல்வா ஒழிக....

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க///


நான் மிகவும் கோவமா இருக்கேன் ரமேஷ், கோமாளி என்னை குற்றாலத்துல தனியா விட்டுட்டு ஓடி போயிட்டான் இந்த பய......

பெசொவி said...

//MANO நாஞ்சில் மனோ said...
என்னை தனியாக குற்றாலத்தில் விட்டுட்டு ஓடிப்போன செல்வா ஒழிக....
//

குற்றாலத்துல இருக்க வேண்டியதெல்லாம்,..................அப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்க, இல்ல?

பெசொவி said...

//MANO நாஞ்சில் மனோ said...
யோவ் என்னய்யா அவசரமா அவசரமா எழுதி போட்டுட்டு வேலைக்கு ஓடிட்டீரா என்ன ஹி ஹி ஹி.....
//

பதிலும் சொல்லிட்டீரு போல? ஹிஹிஹி!

பெசொவி said...

//தமிழ்வாசி - Prakash said...
நறுக்குன்னு எழுதியிருக்கிங்க...போதுமா?
//

அவசர அவசரமா எழுதினதுப்பா, தப்பா இருந்தா மன்னிச்சுடு!

பெசொவி said...

//மாதேவி said...
பதிவர் சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது.
//

உண்மை....உண்மை!

பெசொவி said...

பதிவர் சந்திப்பின் மூலம் ஒரு புரட்சி நடந்திருக்கிறது, அது என்ன வென்றால்..........

பெசொவி said...

......முதல் முறையாக இந்த வலைதளத்தில் 50 பின்னூட்டங்கள், ஐ ஜாலி!

Kousalya Raj said...

சந்திப்பு மிக மிக சுவாரசியமாக சென்றதில் உங்கள் பங்கு குறிப்பிட தக்க ஒன்று...

உங்களுக்கு என் நன்றிகள்+பாராட்டுகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MANO நாஞ்சில் மனோ said... 44

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க செல்வா வாழ்க///


நான் மிகவும் கோவமா இருக்கேன் ரமேஷ், கோமாளி என்னை குற்றாலத்துல தனியா விட்டுட்டு ஓடி போயிட்டான் இந்த பய......//

உங்க நண்பர்கள் கூட்டம் அங்க அதிகமாச்சே. (நான் குரங்க சொல்லலை)

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் !

Anonymous said...

வணக்கம் பெசொவி சார் ... மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க ... முதல் முறை சந்தித்தாலும் நம் அனைவரின் பேச்சிலும் பல வருட பரிச்சயம் தெரிந்ததே ., அது அருமை ....
சந்திப்பு கலகலப்பாய் சென்றதில் உங்கள் பங்கு அதிகம் .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ..

SANKARALINGAM said...

பதிவர் சந்திப்பில்,பெசாவியின் பேச்சுக்கள், ஏன் சிலரால் உண்மை முகம் காட்ட இயலவில்லை என்பதை எடுதுரைக்கும் விதமாய் அமைந்தது.
பதிவர் சந்திப்பு நடைபெற ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பெசொவி said...

//Kousalya said...
சந்திப்பு மிக மிக சுவாரசியமாக சென்றதில் உங்கள் பங்கு குறிப்பிட தக்க ஒன்று...

உங்களுக்கு என் நன்றிகள்+பாராட்டுகள்
//

நன்றி, சகோ!

பெசொவி said...

//கல்பனா said...
வணக்கம் பெசொவி சார் ... மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க ... முதல் முறை சந்தித்தாலும் நம் அனைவரின் பேச்சிலும் பல வருட பரிச்சயம் தெரிந்ததே ., அது அருமை ....
சந்திப்பு கலகலப்பாய் சென்றதில் உங்கள் பங்கு அதிகம் .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி //

நான் படித்த பள்ளியில் பழைய நண்பர்கள் கூடிக் களித்த அனுபவத்திற்குப் பிறகு இந்த சந்திப்பு என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்

Madhavan Srinivasagopalan said...

//பத்து மணிக்கு ஆரம்பிப்பது என்று முடிவு செய்ததால், இந்திய வழக்கப் படி பத்து பத்துக்கே நான் சென்று விட்டேன்; மீட்டிங்கும் சரியாக பதினோரு மணிக்கெல்லாம் முறைப்படி(?) தொடங்கியது. //

ரயில்வே ரிசர்வேஷன் மாதிரி எட்டு மணி முதல்னு போஸ்டருல போட்டு..
பத்து மணிக்கு ஆரம்பிக்க முடிவு பண்ணீங்களா..
அதையும் பதினோரு மணிக்குத்தான் ஆரம்பிச்சீங்களா.. ?

சரியான / திருப்தி தரும் விளக்கம் தேவை..

எஸ்.கே said...

எப்படி இருக்கீங்க? பதிவர் சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி!

CS. Mohan Kumar said...

//ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.//

அப்ப நீங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடிச்சா ??

பெசொவி said...

// மோகன் குமார் said...
//ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.//

அப்ப நீங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடிச்சா ??
//

ஆமா, மோகன்! பலாப்பட்டரை சங்கர் உன்னுடைய நண்பராமே, அதுவும் சொன்னார்

cheena (சீனா) said...

அன்பின் பெசொவி - நடந்ததை சுருக்கமாக எழுதி விட்டீர்கள் - தங்கள் பேச்சு எல்லோரையும் கவர்ந்த ஒன்று. ஏன் அதைப் பற்றி எழுத வில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

யோவ் வெங்கட் - விஏஎஸ் விகேஎஸ் - நான் எதுல இருக்கேன் - உன்னை எதுக்கறதுல சேரப் போறேன்

Madhavan Srinivasagopalan said...

//cheena (சீனா) said...

யோவ் வெங்கட் - விஏஎஸ் விகேஎஸ் - நான் எதுல இருக்கேன் - உன்னை எதுக்கறதுல சேரப் போறேன் //

வெங்கட் VKS அட்மிஷன க்ளோஸ் பண்ணிட்டாரே..
(ஓபன் பண்ணா, பல பேரு அட்மிஷனுக்கு ரெடியா இருக்காங்க, உங்களைப் போலவே..)

R.Gopi said...

நெல்லை பதிவர் சந்திப்பு...

சூப்பரா நடந்திருக்குன்னு சொல்லிட்டீங்களே... தூள்ள்ள்ள்ள்....

கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் இருட்டு கடை அல்வா தரப்பட்டதா என்பதை ஏன் தெரியப்படுத்த வில்லை?

நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதையாவது விரிவாக எழுதி இருக்கலாமே!!

cho visiri said...

//நீங்க பிளாக் எழுதறதை நிறுத்தினாலே
அது சமுதாய சேவைதான்..//

Then how will you be able to post your reaction (read "satire")?

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களை பற்றி நாஞ்சில் பிரதாப் சொல்லியிருந்தார். உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.

Unknown said...

எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி .நன்றி

Paleo God said...

நெல்லையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னை சந்திப்பிலும் நண்பர் மோகனுடன் கலந்துகொள்ளுங்கள். :))