"குழந்தைகள் தின"மாம்
குளிக்க வைத்தார்கள்
துணி கொடுத்தார்கள்
உணவு போட்டார்கள்
ஊர்வலம் நடத்தினார்கள்
இன்னொரு
"சுதந்திர தினம்"
இனிதே கடந்தது.
இனி
அடுத்த வருட "தினத்துக்கு"
"அனாதைகள்" வெயிட்டிங்!
************
ஏணியில் ஏறி
பெரிய போஸ்டரை
சுவரில் ஒட்டினான்
அந்த சிறுவன்
போஸ்டரில் வாசகம்
"குழந்தைத் தொழிலாளரை ஒழிப்போம்"
*************
"இன்னிக்காவது
மம்மி, டாடியை
பாப்பேனா"
புலம்பிய சிறுவனிடம்
ஆயா சொன்னாள்,
"குழந்தைகள் தினமாச்சே,
அதான் அவங்க ஒரு
அநாதை இல்ல விழாவுக்கு
போயிருக்காங்க!"
**************
வானம்பாடிகள் ஐயாவின் சந்தோஷத்துக்காக ஒரு கவிதை(?!)
துன்பம் நீக்கும்
துயரம் போக்கும்
இன்பம் சேர்க்கும்
இனிமை கூட்டும்
இனிய கவிதை
அதன் பெயர்
மழலை
35 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
me d first :) vada enakku thaan
அருமையா இருக்கு கவிதைகள்... ஆனால் மனதிற்கு கனமாகவும் உள்ளது..
இன்னும் இன்ட்லி ல submit பண்ணலையா...
ஆழ்ந்த அர்த்தமுல்ல கவிதைகள் தல
நல்லாருக்கு
///குழந்தைகள் தினமாச்சே,
அதான் அவங்க ஒரு
அநாதை இல்ல விழாவுக்கு
போயிருக்காங்க!" ///
ரொம்ப பீல் பண்ண வெச்சுட்டீங்க...
///ஏணியில் ஏறி
பெரிய போஸ்டரை
சுவரில் ஒட்டினான்
அந்த சிறுவன்
போஸ்டரில் வாசகம்
"குழந்தைத் தொழிலாளரை ஒழிப்போம்"////
அருமை....
ரெண்டாவதும் மூணாவதும் நல்லாருக்கு
கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு!
கவிதைகள் அருமை...
கவிதை எழுதியவருக்கு
வாழ்த்துக்கள்..
( ஹி., ஹி., ஹி..!! இதை
நீங்க தான் எழுதினீங்களான்னு
ஒரு சின்ன Doubt.. )
//வெறும்பய said...
அருமையா இருக்கு கவிதைகள்... ஆனால் மனதிற்கு கனமாகவும் உள்ளது..///
எலேய் முதல்ல ஆபீஸ் ல இருந்து திருடின அந்த லேப்டாப்ப எடுத்து கீழ வை. கனம் குறையும்..
"ஏப்பி சில்ட்ரன்ஸ் டே!"
ஏப்பி what is ஏப்பி?
@ Ramesh
//ஏப்பி what is ஏப்பி?//
For Clarification, changed the title.
//வெங்கட் said...
கவிதைகள் அருமை...
கவிதை எழுதியவருக்கு
வாழ்த்துக்கள்..
( ஹி., ஹி., ஹி..!! இதை
நீங்க தான் எழுதினீங்களான்னு
ஒரு சின்ன Doubt.. )
//
இதைக் கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே, அதுக்காகவே உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
//ஜில்தண்ணி - யோகேஷ் said...
me d first :) vada enakku thaan
//
yes, vada ungalukke! enjoy!
//வெறும்பய said...
அருமையா இருக்கு கவிதைகள்... ஆனால் மனதிற்கு கனமாகவும் உள்ளது..//
உண்மை பல நேரம் கனமா தான் இருக்கு, என்ன செய்ய?
@ பன்னிகுட்டி ராமசாமி
ரொம்ப தேங்க்ஸ் தல!
//shortfilmindia.com said...
ரெண்டாவதும் மூணாவதும் நல்லாருக்கு
//
//எஸ்.கே said...
கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு!
//
Thanks!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வெறும்பய said...
அருமையா இருக்கு கவிதைகள்... ஆனால் மனதிற்கு கனமாகவும் உள்ளது..///
எலேய் முதல்ல ஆபீஸ் ல இருந்து திருடின அந்த லேப்டாப்ப எடுத்து கீழ வை. கனம் குறையும்..//
சரி, சரி குழந்தைகள் தினமும் அதுவுமா அடிச்சிக்காதீங்க, பசங்களா!
நல்ல கவிதைகள் – குழந்தை தொழிலாளிகள் பற்றிய கவிதை மனதை வதைத்தது.
மடக்க வேண்டிய எடத்துல மடக்கி
மடக்க வேண்டாத எடத்துலயும் மடக்கி
எழுதினா வந்துடிச்சி ஒரு கவிதை..
நீங்கள் கவிஞர் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்.
ஒன்னாவது சந்தோஷமா போட்டிருக்கலாம்.
//வானம்பாடிகள் said...
ஒன்னாவது சந்தோஷமா போட்டிருக்கலாம்.
//
ஐயா, உங்க சந்தோஷத்துக்காக நாலாவது கவிதை(?!) சேர்த்துட்டேன்.
உண்மையில் கவிதைகள் அருமை.. :)
//ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே!//
நீங்க ஏன் ஹாப்பி சில்ட்ரன்ஸ் டி! சொல்லவில்லை?? அப்பொ இது ஆணாதிக்க பதிவா??
அட்ரா சக்கை... அட்ரா சக்கை..
நாலாவது செம... ச்சான்ஸே இல்லை...
இப்ப அழகு. நன்றி:)
//TERROR-PANDIYAN(VAS) said...
//ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே!//
நீங்க ஏன் ஹாப்பி சில்ட்ரன்ஸ் டி! சொல்லவில்லை?? அப்பொ இது ஆணாதிக்க பதிவா??
//
ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ? இல்லைன்னு சொன்னா என்ன பண்ணவ?
நாலாவது கவிதை சூப்பர்
@ரமேஷ்
//ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ? இல்லைன்னு சொன்னா என்ன பண்ணவ?//
ஆமாம் சொன்னா உன் தலைல கல்ல போடுவேன்... இல்லை சொன்னா கல்லுல உன் தலை போடுவேன்...
நல்லா இருக்கு..கப்பலை எங்களுக்கும் காட்டுவீங்க இல்ல?
மூணு சோக கவிதைகள் ஒரு சந்தோஷ கவிதை .,
உண்மைலேயே கலக்கிட்டீங்க அண்ணா ..!! நல்லா இருக்கு ..
தலைவா....
இத நீங்களே நீங்க தான் எழுதினீங்களா? அப்படின்னு நெறைய பேருக்கு டவுட் வந்ததுக்கு என்ன ரீஜன்?
எனிவே.... அனைத்து கவிதைகளும் அருமை....
அனாதை குழந்தைகள்
படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகள்
பெற்றோரின் அன்புக்கு ஏங்கும் குழந்தை
என வகை வகையாய் எழுதி தள்ளி விட்டீர்கள்...
நன்றாக இருந்தது....
அப்பப்போ இந்த மாதிரி பதிவும் போடுங்க...
@ Gopi
ரொம்ப தேங்க்ஸ், தல!
//அப்பப்போ இந்த மாதிரி பதிவும் போடுங்க...//
நாம என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்!
:)
நான் நம்ப மாட்டேன்
நான் நம்ப மாட்டேன்
இதை நீங்க தான் எழுதுனீங்கனு பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல சத்தியம் பண்ணுங்க
ஆழ்ந்த கருத்துக்கள்
அற்புதமான சிந்தனைகள்
நல்லா இருந்துங்க....
Post a Comment