1. பேசுவது எப்படி?
2. பேசுவது எப்படி -2
இந்த கால கட்டத்தில் தொலைபேசி ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அதுவும் கையோடு எடுத்துச் செல்லக் கூடிய (செல்)போன்கள் இல்லாத ஆசாமிகளே இல்லை என்று சொல்லலாம்
போனில் பேசுவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
நீங்கள் யாருக்காவது போன் செய்யும்போது நீங்கள் எந்த எண்ணை அழைத்தீர்களோ அதை உறுதி செய்யுங்கள்.பிறகு, நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள். பிறகு நீங்கள் பேச விரும்பும் ஆளை அழையுங்கள்.
(உதாரணமாக, "வணக்கம், அது 12345 -ஆ நான் எக்ஸ் பேசுகிறேன், மிஸ்டர் ஒய் இருக்காரா?" )
இப்படி செய்வதால் பல குழப்பங்கள் தவிர்க்கப் படும். எனக்குத் தெரிந்து நிறைய பேர் "ஹலோ, நான் யாரு தெரியுதா?" என்று கேட்பதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.
அதே போல், உங்களுக்கு போன் வந்தால், முதலில் உங்கள் எண்ணையும் உங்கள் பேரையும் சொல்லிவிடுங்கள். ராங் காலாக இருந்தால், அந்த முனையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். செல்போனாகவே இருந்தாலும் உங்கள் எண்ணையும் பெயரையும் சொல்வது நல்லதுதான். ஒரு வேளை, அவர் தவறாக அழைத்திருக்கலாம் அல்லவா?
போனில் பேசும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நிறைய பேர் ஏதாவது எழுதிக் கொண்டு அல்லது படித்துக் கொண்டு பேசுகின்றனர். இது தவறு. நீங்கள் ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு வேலை தான் செய்ய முடியும். காது எதிர் முனையில் இருப்பவர் சொல்வதைக் கேட்கும்போது, உங்கள் கண்ணும் மனமும் வேறு எதிலாவது கருத்தாக இருக்குமானால், அது இரண்டு வேலைகளையும் கெடுத்து விடும். "சாரி, நான் கொஞ்சம் பிசி. கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கள் அல்லது நான் பிறகு அழைக்கிறேன்" என்று சொல்லி உங்கள் வேலையை முடித்துக் கொண்டு பிறகு அவரிடம் பேசுவது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப் படுத்தும்.
மற்றுமொரு விஷயம். எந்தக் காலத்திலும் பொது இடத்தில இருக்கும்போது உங்கள் வீட்டு விலாசங்களை போன் மூலம் சொல்லாதீர்கள். வேண்டுமானால் எஸ்.எம்.எஸ். செய்யுங்கள். உங்கள் வீட்டு விஷயங்களை பொது இடங்களில் விவாதிப்பதும் உங்களுக்கு ஆபத்தாகவே முடியும். "அந்த ரூம்ல பீரோ லாக்கர்ல பணம் வச்சிருக்கேன்" போன்ற விஷயங்களை திருடர்கள் கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லத் தேவையில்லை.
இன்னொன்று - இது கொஞ்சம் காமெடி கலந்த ஆனால் தவிர்க்க வேண்டிய ஒன்று. செல்போனில் பேசும்போது அண்ணா நகரில் இருந்து கொண்டு "தாமஸ் நகர்ல இருக்கேன் சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்று பலரும் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒன்று சிந்திக்க வேண்டும், இதைக் கேட்கும் யாருமே அந்த ஆளைப் பற்றி தவறாக தான் நினைப்பார்கள். இப்படி முகம் தெரியாதவரிடம் கூட அவமானப் பட தேவையே இல்லை. "வந்துகிட்டிருக்கேன் சார், பஸ்லதான் இருக்கேன்"என்று பொதுவாகப் பேசும்போது பிறர் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.
கடைசியாக ஒன்று, பொது இடங்களில் போன் பேசும்போது கூடுமானவரை மெதுவாகப் பேசுங்கள். உரத்துப் பேசுவதால், உங்கள் மீது பிறருடைய கவனத்தை ஈர்க்கிறீர்கள், இது ஆபத்தில் முடியலாம். இன்னொன்று மற்றவருடைய வேலையையும் கெடுக்கிறீர்கள் இது மனித உரிமை மீறல்.
அளவோடு பேசுங்கள், அறிந்து பேசுங்கள், உங்கள் பேச்சு அழகாக இருக்கும்!
மீண்டும் சிந்திப்போம்!
டிஸ்கி : பேசுவது எப்படி மூணாவது பார்ட் கேட்ட வெங்கட்டுக்காக் இந்தப் பதிவு (அதுனால அவருக்குப் பேசத் தெரியாதான்னு யாரும் கேக்க வேண்டாம்)
34 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
வடை.. வடை..
//Madhavan Srinivasagopalan said...
வடை.. வடை..//
செல்வாவுக்கு போட்டியா நீங்களா?
இன்னும் சிலபேர் தங்கள் சொந்த (Purely personal)விஷயத்தை செல்போனில் பொது இடங்களில் பேசுகின்றனர். இதுவும் தவறான ஒன்றே!
// Madhavan Srinivasagopalan said...
வடை.. வடை..
//
ஒரு வடை மட்டும்தான்.
நல்ல அறிவுரை.. நன்றி!
//உரத்துப் பேசுவதால், உங்கள் மீது பிறருடைய கவனத்தை ஈர்க்கிறீர்கள், இது ஆபத்தில் முடியலாம். இன்னொன்று மற்றவருடைய வேலையையும் கெடுக்கிறீர்கள் இது மனித உரிமை மீறல்.//
சில பேர் பேசுவதை கேட்டால் ரொம்ப தொல்லையா இருக்கும் ..........
//"அந்த ரூம்ல பீரோ லாக்கர்ல பணம் வச்சிருக்கேன்"//
இப்படிலாம் பேசினா தப்பில்லீங்க..
பணத்த வேற எடத்துல வெச்சிட்டு..
நிறைய தகவல்கள்.
சரியானவையும் கூட.
// நாகராஜசோழன் MA said...
//Madhavan Srinivasagopalan said...
வடை.. வடை..//
செல்வாவுக்கு போட்டியா நீங்களா?//
இப்படி சண்டே வடை புடிச்சாத்தான் உண்டு..
எத்தன தவிட ஜஸ்ட் மிஸ் பண்ணி இருக்கேன்..
பல தடவ 99, 101 தான் கெடச்சுது.. வட கெடைக்கலை..
என்னோட வலி எனக்குத்தான் தெரியும்..
இது பத்தி உங்களுக்கு போன பண்ணலாமான்னு யோச்சிட்டு இருக்கேன்
நல்லாச் சொல்லியிருக்கீங்க, இந்த பப்ளிக்ல செல் போன் பேசுறவனுங்க பண்ற தொல்லை இருக்கே? அது வந்த புதுசுல பந்தா பண்றதுக்காக பண்ணானுங்க சரி ஓக்கே< ஒத்துக்கலாம், ஆனா இப்போத்தான் கழுத கூட செல் வெச்சிருக்கே, இன்னும் இவனுங்க திருந்தற மாதிரி தெரியலியே சார்?
/////Madhavan Srinivasagopalan said...
//"அந்த ரூம்ல பீரோ லாக்கர்ல பணம் வச்சிருக்கேன்"//
இப்படிலாம் பேசினா தப்பில்லீங்க..
பணத்த வேற எடத்துல வெச்சிட்டு../////
எப்படியோ பணம் வீட்டுக்குள்ள இருக்கில்ல? அது போதுமே அவனுகளுக்கு...!
ஆனா இதையெல்லாம் என்கிட்ட
போன் பேசும் போது நீங்க ஏன்
கடைப்பிடிக்கறது இல்லைன்னு தான்
எனக்கு புரியவே மாட்டேங்குது..
ஹி., ஹி., ஹி..!!
@ venkat
ஓஹோ, நேத்து வந்த போன் கால்ல, "யாரு கண்டுபிடிங்க பாப்போம்"னு சொல்லி சிரிச்சது நீங்கதானா? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு.
//எப்படியோ பணம் வீட்டுக்குள்ள இருக்கில்ல? அது போதுமே அவனுகளுக்கு...!//
அதெல்லாம் நீ சொல்லப்டாது..
நானும் சொல்ல மாட்டேன்...
வூட்டுல இல்லை.. வேற எடத்துலதான் வெப்போம்..
பஸ்ஸிலோ பொது இடத்திலோ மிகச் சத்தமாகப் பேசும் பிரகிருதிகளைக் கண்டு நானும் சொல்ல நினைத்திருக்கிறேன் இதையெல்லாம்...!
தல....
ஃபோன் பண்ணிட்டு பேசுறத பத்தி இவ்ளோ சொல்லி இருக்கீங்க...
இவ்ளோ மேட்டரையும் ஞாபகம் வச்சுட்டு பேசினா, பேசறதுக்கு எதாவது மேட்டர் இருக்குமா?
கடைசியா ஒண்ணு சொல்லுங்க....
யாருக்காவது ஃபோன் பண்ணிட்டு பேசலாமா கூடாதா!!??
//R.Gopi said...
தல....
கடைசியா ஒண்ணு சொல்லுங்க.... யாருக்காவது ஃபோன் பண்ணிட்டு பேசலாமா கூடாதா//
இப்படி பேசறது நல்லதுன்னு நான் சொல்றேன். அப்படி இல்லைனா, வடிவேலு பாணியில "ஆணியே புடுங்க வேண்டாம்"
நல்ல விசயங்கள்.. பலருக்கு உபயோகமானதும் கூட...
மிக நல்ல பதிவு!
அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்து. சில தவறுகள் என்னிடமும் உண்டு. திருத்திக் கொள்கிறேன் சகோதரா
பே பேபே பெப்பே
சரி எனக்கு கொஞ்சம் டவுட்டு உங்ககிட்ட போன் பண்ணி கேக்குறேன். என் நம்பர் க்கு ரீசார்ஜ் பண்ணிடுங்களேன்
சரி போன் வருது பேசிட்டு வரேன்
25
தமிழ் மணம் Top 20-ல் வந்ததை பத்தி ஏதும் சொல்லலை. தன்னடக்கம்?
//மோகன் குமார் said...
தமிழ் மணம் Top 20-ல் வந்ததை பத்தி ஏதும் சொல்லலை. தன்னடக்கம்?//
அப்படியெல்லாம் இல்லப்பா!
என்னத்துக்கு அனாவசியமா தமிழ்மணத்துக்கு என்னால விளம்பரம்னுதான்..........ஹிஹி!
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//மோகன் குமார் said...
தமிழ் மணம் Top 20-ல் வந்ததை பத்தி ஏதும் சொல்லலை. தன்னடக்கம்?//
அப்படியெல்லாம் இல்லப்பா!
என்னத்துக்கு அனாவசியமா தமிழ்மணத்துக்கு என்னால விளம்பரம்னுதான்..........ஹிஹி! //
எப்படி.. எப்படி.. ?
எப்படி சார் முடியுது.. பின்னி பெடலெடுத்துட்டீங்க..
தமிழமணத்தில் 21வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்...
// அண்ணா நகரில் இருந்து கொண்டு "தாமஸ் நகர்ல இருக்கேன் சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்று பலரும் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் //
நிறைய பேரை பார்த்திருக்கேன்... சும்மா பஸ்ல இருக்குறவங்க முன்னாடி சீன் போடுவாங்க...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பே பேபே பெப்பே
//
வெரி குட். அப்படிதான். நீ ஆணியே புடுங்க வேண்டாம்.
//அதை உறுதி செய்யுங்கள்.பிறகு, நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள். பிறகு நீங்கள் பேச விரும்பும் ஆளை அழையுங்கள். //
ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா . இந்த போன்ல பேசுறவுங்க தொல்லை தாங்க முடியாது . போன் பண்ணி மிரட்டுரமாதிரி பேசுறது ., அப்புறம் ஐயோ மாதி கூபிட்டேன்க அப்படின்னு சொல்லுறது .. அதே மாதிரி போன் பண்ணும் போது நான் பேசுறேன் அப்படின்னு சொல்லிட்டு யார் கூட பேசணுமோ அவர் இருக்கற அப்படின்னு கேக்கணும் ..!!
//அண்ணா நகரில் இருந்து கொண்டு "தாமஸ் நகர்ல இருக்கேன் சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்" என்று //
ஆபத்துக்கு பொய் சொல்லலாம்னு அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்காரே.
”பெண்சிங்கம்” டி.வி.டியோட உன் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கேன் என்று யாராவது போன் பண்ணினால் அயர்லாந்தில் இருக்கேன் என்று கூட சொல்லாமே. (நம்ம சுத்தியாரும் இல்லையான்னு பார்த்துட்டு இந்த மாதிரி பொய் சொல்லலாம்
தயவு செய்து பெண்கள் சாலைகளில் செல் உபயோக்க தடை போட வேண்டும்
speedsays.blogspot.com
Post a Comment