உங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி மாட்டிக்காம தப்பிக்கறதுக்குதான் இந்தப் பதிவு.
அதுதான் எங்களுக்குத் தெரியுமே, ஒரு அம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினா தப்பிசுடலாமே!"ன்னு நீங்க சொல்றது கேக்குது. ஆனா ஒவ்வொரு தடவையும் அம்பது நூறுக்கு நீங்க எங்க போவீங்க? அதுதான், இப்ப ஒரு ஐடியா சொல்றேன்.
முதல்ல நீங்க என்ன பண்ணனும்னா, கையில எந்த பேப்பரும் இல்லாம போலீஸ் இருக்கற ஏரியாவா பாத்து வண்டிய ஒட்டிக்கிட்டு போங்க. போலீஸ் உங்களை நிறுத்தலாம், நிறுத்தாம கூட போகலாம்.
ஒரு வேளை, உங்களைக் கைகாட்டி நிறுத்தலேன்னா கூட, நீங்க கொஞ்சம் ஓவர் ஸ்பீடா போங்க அப்பத்தான் அவங்களே உங்களை கூப்பிட்டு வண்டில இருக்கற சாவிய எடுத்து வச்சிக்கிட்டு உங்களை கேள்வி கேப்பாங்க.
இப்பதான் நீங்க முக்கியமான கட்டத்துல இருக்கீங்க. உங்க கிட்ட லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இதுலாம் இல்லாம இருந்தா, தைரியமா அந்த போலீசை முறைங்க. அவ்ளோதான், ஒண்ணு உங்களை உடனே நடமாடும் நீதிமன்றத்துக்குக் கூட்டிகிட்டு போய் பைன் போடுவாங்க, இல்லன்னா, உங்க வண்டிய பிடுங்கி வச்சுக்கிட்டு கோர்ட்ல வந்து வாங்கிக்க சொல்வாங்க.
இப்படி ஒரு தடவை நடந்துட்டா, நீங்க ஜன்மத்துக்கும், தேவையான டாக்குமெண்ட்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகவே மாட்டீங்க. இப்படி செஞ்சா, எந்த காலத்திலேயும் டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்க மாட்டீங்க, ஓகேவா?
டிஸ்கி : என்ன முறைக்கறீங்க? இந்த லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இதெல்லாம் நம்ம வண்டிக்கு அவசியம் வேணும்! ஒரு வேளை, விபத்தோ அல்லது வண்டி காணாம போனாலோ, இந்த டாக்குமெண்ட்ஸ் வச்சிதான் நாம இழப்பீடு வாங்க முடியும். நம்ம வசதிக்காக இதெல்லாம் வேணும்னு கவர்மெண்டு சொல்லுது. அதுனால, அம்பதோ நூறோ இருந்தா போதும், இன்ஷூரன்ஸ் இத்தியாதி பேப்பரே வேணாம்னு இருந்தீங்கன்னா, உங்களுக்குத் தான் இழப்பு, புரியுதா?
29 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
டிச்கிலதான் பதிவே இருக்கு போல..:)
நல்ல பதிவு.
இப்படி ஒரு தடவை நடந்துட்டா, நீங்க ஜன்மத்துக்கும், தேவையான டாக்குமெண்ட்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகவே மாட்டீங்க///
நீங்க அப்படிதான் செஞ்சீங்களா..
///ஒரு வேளை, உங்களைக் கைகாட்டி நிறுத்தலேன்னா கூட, நீங்க கொஞ்சம் ஓவர் ஸ்பீடா போங்க///
இப்படி செஞ்சா ஆளும் கட்சின்னு நெனச்சிக்க போறாங்க....
நல்ல ஐடியாதான் ? எதுக்கு இந்த டென்சன் ஆர்சி புக் , லைசென்ஸ் , இன்சுரன்ஸ் ........... பேசாம வண்டியே இல்லாம போயிட்டம்ன்னா ????
யப்பா... இவர் தொல்லை தாங்கமுடியலப்பா... தினமும் ரம்பம் போடுறார்... எத்தனை முறைதான் என் கழுத்து அறுபடுறது
//இப்படி ஒரு தடவை நடந்துட்டா, நீங்க ஜன்மத்துக்கும், தேவையான டாக்குமெண்ட்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகவே மாட்டீங்க. இப்படி செஞ்சா, எந்த காலத்திலேயும் டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்க மாட்டீங்க, ஓகேவா?
/
அட அட .., எப்படியெல்லாம் ஐடியா கொடுக்குறாங்க ..!!
பேசாம நடந்தே போயிரலாம் :-)
நல்லா தான் இருக்கு நீங்க சொல்லறது..
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ?
நல்லா சொன்னீங்க. ஆனா எங்கிட்டே வண்டி இல்லையே??
நான் கிழிஞ்ச பத்துருவா நோட்ட குடுத்துலாம் தப்பித்திருக்கேன் .அதையும் பக்கிக வாங்கிட்டு விட்டுச்சுக .அதுலயும் ஒரு பக்கி ஏட்டம்மா போய் காச குடுன்னு சொல்லுச்சு .
நல்ல பதிவு.
நீங்க சொல்றது சரிதான் தல ஆனா அவங்க பிடிக்கணும்னு நினச்சு மாசக்கடைசில இறங்குவாங்க பாருங்க அடேங்கப்பா பார்க்க ரெண்டு கண்போதாதுங்க கட்சிக்கொடி வண்டி மட்டும் போய்கிட்டே இருக்கும் காலணா அரையணா சம்பலம்வாங்குரவங்க வண்டி மட்டும் நிக்கும் இன்னும் இது நடக்குது தல இத மாற்றமுடியுமா எல்லா பேப்பரும் நம்ம கைல இருந்தாலும் வந்ததுக்கு வட்டிய கட்டிட்டு போகணும்னு சொல்லுவாங்க
ha ha ha
nakkal?good
நானும் எத்தனையோ தடவை என் வண்டியில இந்த டாகுமெண்ட்ஸ் எல்லாம் இல்லாமயே போயிருக்கேன்.. யாரும் கண்டுகிட்ட மாதிரியே தெரியலயே..
ஒரு வேளை என் சைக்கிள நிறுத்த பயப்படுறாங்களோ??!!
//அருண் பிரசாத் said...
யப்பா... இவர் தொல்லை தாங்கமுடியலப்பா... தினமும் ரம்பம் போடுறார்... எத்தனை முறைதான் என் கழுத்து அறுபடுறது
//
advise panninaa ungalukku pidikkaatho?
டிஸ்கி அருமை.
கூடவே ”மாட்டுவான்னு ” நினைப்பவர்களையே காவல்துறை புடிக்குது.
வண்டியே இல்லாம போனா எவன் பிடிப்பான்...
ஆஹா சூப்பர் ஐடியா...
Important RTO information
"Notice from Praveen Sood (Additional Commissioner for Traffic, Mumbai) - 022 - 22942276."
Take a printout of this and keep it in your Vehicle's glove compartment.
May come handy... Not knowing this may leave a big hole in your pocket.
Information you should have: If you are getting caught quite often by traffic police, then please read on.
From now onwards, the Traffic Police cannot catch a motorist just to examine the driving license or vehicle documents. They can catch you only if you have violated any traffic laws or if you are driving drunk. Remember that when caught for traffic violation, the fine you pay must be limited to the violation. In other words, the police can't bloat the bill saying that you have no insurance cover or emission certificate, etc. Many motorists do not know this. According to the law, no policeman can slap a penalty on you just because you have no insurance or emission certificate. If you have not purchased insurance cover for your vehicle, then the police officer must issue a notice, not impose penalty. You must be given 15 days' time to purchase insurance cover and one week for obtaining the emission certificate. Days later, meet the sub-inspector at his station with the insurance cover or emission certificate, so that he will annul the charge at once.
Police can fine you only if you fail to produce these documents within the stipulated period. If your vehicle is brand new, then you need not bother about obtaining the emission certificate for one full year. In response to a question as to why policemen fine people instantly without giving them time to obtain insurance cover or emission certificate, Additional Commissioner for Traffic Praveen Sood said, "Yes, it is a mistake. People must force policemen to issue notice or complain to me at least the following day.” The best way to teach the police a lesson is by filing a written complaint with their higher officials and, a week later, using the Right to Information Act (RTI) to know the action taken against them. Remember, any question or application filed under RTI cannot be ignored and no official is bold enough to ignore the RTI Act.
Praveen Sood
(Additional Commissioner for Traffic, Mumbai)
022 - 22942276.

Some changes in Traffic Rules in India
Please the link below
http://groups.google.com/group/worldinhand/browse_thread/thread/327747695fc1feac
நீங்க நல்லவரா, கெட்டவரா?
தஞ்சாவுரு கல்வெட்டுல பதிய வேண்டிய பதிவு...
நா பிலேணுல போனாலும், டிரைவிங் லைசென்சு எடுத்துக் கிட்டு தான் போவேன்.. எல்லாருக்கும் ஏதாவது ஆகி.. நா மட்டும் பிளேன ஓட்ட வேண்டியது ஆச்சுன்னா.. அதான்..
உங்களுக்குத் தான் இழப்பு, புரியுதா?///
nallaa puriyuthu...
:) :)
1. always you can go in the center road.
2. On signals or possible traffic police places, you shall go behind a bus. Because we are very sure that traffic police will not stop the bus.
Post a Comment