இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.
சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.
அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது இருபது நாட்கள் கொண்டாடப் படுவது. முதல் பத்து நாட்கள் "பகல் பத்து" என்றும் இரண்டாம் பத்து நாட்கள் "ராப்பத்து" என்றும் சொல்வார்கள். பகல் பத்து என்கிற முதல் பத்து நாட்களில் பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் பிரபந்தங்களும் "ராப்பத்து" என்கிற இரண்டாம் பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பிரபந்தமும் கோயில்களில் ஓதப்படும்.
இந்த இராண்டாம் பத்தின் முதல் நாளே "வைகுண்ட ஏகாதசி" என்று கொண்டாடப் படுகிறது. (இன்னும் நிறைய சொல்லலாம், இருந்தாலும் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்)

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.
அதே சமயம், இந்தப் பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் வறுமை விட்டு வளமை பெற்று பெருமையோடு வாழ அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரியவேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.
கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!
டிஸ்கி : போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)
29 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
இட்லி வடை, போண்டா.. எல்லாம எனக்குத்தான்
//இட்லி, வடை.. பொண்ட... எல்லாம் எனக்குத்தான். //
ஆனா சாப்பிடத்தான் கட்டுப்பாடு, இன்னிக்கு, விரதமாச்சே.. அதான்..
//
டிஸ்கி : போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)///
அந்த பதிவுக்கு கமெண்ட் போட்டிருந்தா இங்க போட வேண்டாமல?
அப்படின்னா இட்லி, வடை, போண்டா எல்லாத்தையும் நான் எடுத்துக்கிறேன் ;-)
நான் சொர்க்கம், வைகுண்டம் இரண்டும் ஒன்று என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் :-) தகவலுக்கு நன்றி!
உங்களுக்கும் வைகுண்ட ஏகாதசித் திருநாள் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்.
இப்ப தான் கோவில் போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வரேன் . நீங்களும் பதிவு போட்டு இருக்கீங்க
எனக்கு இதில் ஒரு சந்தேகம் PSV சார் .....இந்த முன் பத்து பின் பத்து சொல்லுறாங்க இல்ல ....அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
////
டிஸ்கி : போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)///
அந்த பதிவுக்கு கமெண்ட் போட்டிருந்தா இங்க போட வேண்டாமல?//
ரமேஷ் எதுக்கு மீள் பதிவு என்றால் நீ போன வைகுண்ட ஏகாதசிக்கு பதிவ பார்த்து குளித்தது ........இந்த வாடியும் நீ குளிக்காம மறந்துற கூடாது என்று தான் ........இல்லையா psv சார் ??
அதே சமயம், இந்தப் பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் வறுமை விட்டு வளமை பெற்று பெருமையோடு வாழ அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரியவேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.///
நீங்க ரொம்ப நல்லவர்...
//இம்சைஅரசன் பாபு.. said...
இப்ப தான் கோவில் போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வரேன் . நீங்களும் பதிவு போட்டு இருக்கீங்க
எனக்கு இதில் ஒரு சந்தேகம் PSV சார் .....இந்த முன் பத்து பின் பத்து சொல்லுறாங்க இல்ல ....அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
//
உங்கள் கேள்விக்கு நன்றி பாபு. நிறைய பேர் பரமபததுக்கும் சொர்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம பேசுவதால், ஒரு விளக்கமாக இங்கு பதிவு போட்டேன். நீங்கள் கேட்ட கேள்வி சம்பந்தமாக பதிவில் எழுதிவிட்டேன்.
nalla pathivu...
ரொம்ப நன்றி PSV சார் .
இங்கே பக்கத்துல பெருமாள் கோவில் இல்ல..யோசிச்சுட்டே இருந்தேன்...சரியா இந்த பதிவை பார்த்தேன்..நன்றி:))))))))))))))))))))
வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்!
சின்ன வயசில் ஏகாதசி அன்னைக்கு கண்ணு முழிச்சு பரமபதம் விளையாண்ட ஞாபகமெல்லாம் வருது!
வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள் sir
15
vaikunda egaathesi nu sonnathuku thanks sir !!!
////போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)//
அப்போ போன வருஷம் போட்ட கமெண்டையே இந்த வருஷமும் எடுத்துக்கோங்க....
நல்ல பதிவு....
nice post. :-)
நான் சொர்க்கம் நரகம் இரண்டுதான் இருக்குது அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் . நீங்க மூணாவதா ஒண்ணு பரமபதம் அப்படின்னு சொல்லிருக்கீங்க ..!!
நல்லா இருக்குங்க...
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...நன்றி.
//பகல் பத்து என்கிற முதல் பத்து நாட்களில் பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் பிரபந்தங்களும் "ராப்பத்து" என்கிற இரண்டாம் பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பிரபந்தமும் கோயில்களில் ஓதப்படும்.//
I do not know as to how far the following amendment would be useful to the viewers. But still it is warranted.
Amendment (1): During the second phase,namely, (I)rappattu Madurakavi Azhwar's Prabhandam would also be recited.
Amendment (2): On the twentyfirst day, the Mudal Azhwars, (Poigai, Bhootham,and Paeyazhvar) Prabhandams would be recited.(including other prabhandhams by Thirumangai,nammazhvar,and Thirumzhizai (the entire collection is known as Iyarpaa).
To state in a nutshell, during the first phase of 10 days Mudhal and Irandaam Aayiram, during the next 10 days Naangaam Aayiram, and on the Added single day (21st Night) Moodraam Aayiram would be recited.

அன்பின் பெசொவி - வைகுண்ட ஏகாதசி பற்றிய இடுகை அருமை - நல்ல விளக்கம் - பரமபதமா சொர்க்கமா என்பது பற்றி . பலர் இன்னும் சொர்க்க வாசல் என்று தான் கூறுகிறார்கள். இவர்கல் சைவர்களாக இருக்கலாம் . வைணவர்கள் பரமபத வாசல் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இனிய வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துகள் பெசொவி. ஆமாம் அதென்ன வைணவ அன்பர்களுக்கு மட்டும் வாழ்த்துகள் - ஏன மற்றவர்களுக்குக் கிடையாதா ? ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பரமபத வாழ்த்துக்கள்.
நானும் ஏகாதசி பத்தி ஒரு பதிவெழுதி இருக்கிறேன் தோழர் ...
வாங்களேன் ...
http://neo-periyarist.blogspot.com/2010/12/blog-post.html
// அப்போ போன வருஷம் போட்ட
கமெண்டையே இந்த வருஷமும் எடுத்துக்கோங்க.... //
ரிப்பீட்டு..!!
@ அருண் & வெங்கட்
// அப்போ போன வருஷம் போட்ட
கமெண்டையே இந்த வருஷமும் எடுத்துக்கோங்க.... //
ரிப்பீட்டு..!!
அருண் போன வருஷமும் கமெண்ட் போடல, அப்படீனா, இந்த வருஷமும் போடலைன்னு எடுத்துகிட்டேன்.
இப்போ வெங்கட் சொன்னதுக்கு அப்புறம், வெங்கட் கணக்கிலேயும் no comment-னு எடுத்துகிட்டேன்
ஆஹா....
சொர்க்க வாசல் திறந்து, அந்த அரங்கனின் தரிசனம் கண்டேன்...
கோடி நன்றி உங்களுக்கு உரித்தாகுக...
//டிஸ்கி : போன வருடம் போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)//
கண்டிப்பாக... அரங்கனின் அருள் கிடைக்கும் எனும் போது, எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்...
Post a Comment