என்னை விட்டு பிரித்துவிடாதே
என்று இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தேன்
வாசலில் புது செருப்பு!
ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கணும்னா, சொல்றவங்க வார்த்தை சுத்தமா இருக்கணும், கேக்கறவங்க எண்ணமும் தெளிவா இருக்கனும்.
ஒரு ஜோக்
ஒருவர் : அவன் என்னைப் பார்த்து அரை லூசுன்னு திட்டிட்டான் சார்!"
மற்றவர்: விடுங்க, அவனுக்கு எதுவுமே அரைகுறையாய்த் தான் தெரியும்"
ஒரு (management) தத்துவம்
இந்தக் காக்கா மட்டும் மரத்து மேல ஜாலியா உக்காந்திருக்கேன்னு ஒரு முயல் தானும் அந்த மரத்துக்கு கீழ ஜாலியா உக்காந்துச்சாம். ஒரு ஓநாய் வந்து முயலை அடிச்சு சாப்ட்டுச்சாம். நீதி: ஒண்ணும் பண்ணாம ஜாலியா இருக்கணும்னா, எப்பவுமே டாப் லெவல்ல இருக்கணும்.
ஒரு குவிஸ்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவற்றைத் தவிர ஒரு மூன்று நாட்கள் உங்களால் சொல்ல முடியுமா? (யாரும் விடை சொல்லவில்லை என்றால், நான் சொல்லுகிறேன்)
23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
நேற்று, இன்று நாளை
இந்த வாரம் சந்தை கலைகட்டியிருக்கு..
கவிதையும் தத்துவமும் கலக்கல்ஸ்..
குவிஸுக்கு விடை தெரியும். வேற யாரும் சொல்லாட்டி சொல்றேன்.. :)
நாளை ,இன்று, நேற்று
சரி அப்புறம்?
//அவன் என்னைப் பார்த்து அரை லூசுன்னு திட்டிட்டான் சார்!"///
உங்களை பாத்தா?
management தத்துவம் நல்லாஇருக்கு...
// ஒருவர் : அவன் என்னைப் பார்த்து
அரை லூசுன்னு திட்டிட்டான் சார்!"
மற்றவர்: விடுங்க, அவனுக்கு எதுவுமே
அரைகுறையாய்த் தான் தெரியும்" //
விடுங்க பாஸ்.. எனக்கு கூட உங்களை
அரைகுறையாய்த் தான் தெரியும்
சந்தை கலகலப்பாக இருக்கு.
management தத்துவம் நல்லாஇருக்கு...
இறைவனிடம் வேண்டிய கவிதை படு சூப்பர்...
//ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கணும்னா, சொல்றவங்க வார்த்தை சுத்தமா இருக்கணும், கேக்கறவங்க எண்ணமும் தெளிவா இருக்கனும்//
இந்த பொன்மொழியை “மன்மதன் அம்பு” படம் வந்து இருக்கற இந்த நேரத்துல எழுதியிருப்பதின் மர்மம் என்னவோ?
//நீதி: ஒண்ணும் பண்ணாம ஜாலியா இருக்கணும்னா, எப்பவுமே டாப் லெவல்ல இருக்கணும்.//
இது என்ன உங்களுக்காக நீங்களே எழுதினதா?
அந்த மூன்று நாட்கள் :
கிருஸ்துமஸ்
தீபாவளி
ரம்ஜான்
//இந்த பொன்மொழியை “மன்மதன் அம்பு” படம் வந்து இருக்கற இந்த நேரத்துல எழுதியிருப்பதின் மர்மம் என்னவோ?//
ஆஹா, அது ஒரு coincidence தல!
@ Gopi
மிகச் சரி!
//அனு said...
இந்த வாரம் சந்தை கலைகட்டியிருக்கு..
கவிதையும் தத்துவமும் கலக்கல்ஸ்..
குவிஸுக்கு விடை தெரியும். வேற யாரும் சொல்லாட்டி சொல்றேன்.. ://
தேங்க்ஸ்! கோபி சரியா சொல்லிட்டாரு, மேடம்!
//வெங்கட் said...
// ஒருவர் : அவன் என்னைப் பார்த்து
அரை லூசுன்னு திட்டிட்டான் சார்!"
மற்றவர்: விடுங்க, அவனுக்கு எதுவுமே
அரைகுறையாய்த் தான் தெரியும்" //
விடுங்க பாஸ்.. எனக்கு கூட உங்களை
அரைகுறையாய்த் தான் தெரியும்
//
சரியா சொன்னீங்க!
(என்னை பாஸ்னு கூப்பிட்டீங்களே, அதை சொன்னேன்! உங்களுக்கு பாஸா இருந்தா அப்படிதானே இருக்க முடியும்?)
உங்கள் பார்வையில் பட்டதையெல்லாம் பட்டென்று சொல்லியிருக்கீங்க நல்லாருக்கு
சார் ஒரு டவுட்டு இத்தன பிளாக்க எப்படி மெயிண்டெய்ன் பண்றீங்க?
ஹிஹிஹி
//ஒரு கவிதை
என்னை விட்டு பிரித்துவிடாதே
என்று இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தேன்
வாசலில் புது செருப்பு!
//
இதுக்கெல்லாமா வேண்டுரீங்க ..? ஹி ஹி ஹி
//
நீதி: ஒண்ணும் பண்ணாம ஜாலியா இருக்கணும்னா, எப்பவுமே டாப் லெவல்ல இருக்கணும்.//
என்ன ஒரு தத்துவம் போங்க ..
//ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவற்றைத் தவிர ஒரு மூன்று நாட்கள் உங்களால் சொல்ல முடியுமா? (யாரும் விடை சொல்லவில்லை என்றால், நான் சொல்லுகிறேன்)
///
முதல் ஞாயிறு , இரண்டாம் ஞாயிறு , மூன்றாம் ஞாயிறு ..
ஹி ஹி ஹி
//மாணவன் said...
சார் ஒரு டவுட்டு இத்தன பிளாக்க எப்படி மெயிண்டெய்ன் பண்றீங்க?
ஹிஹிஹி
//
கேள்வியிலேயே பதிலும் இருக்குது, மாணவன்!
தத்துவம் சூப்பர் தல.....
கவிதையும்... எப்படி எல்லா பயப்பட வேண்டி இருக்கு...
management தத்துவம் ரொம்ப அருமை நண்பரே... சிந்திக்க வைத்தது...
டாப் தத்துவம்...!
Post a Comment