அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, February 5, 2011

இப்படி இருந்தா எப்படி இருக்கும்?



ஒருவர் சிற்பங்கள் விற்கும் ஒரு கடைக்கு போனார். அங்கே இருக்கும் சிற்பங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே இருந்த ஒரு எலி சிலை மிக அருமையாக இருந்தது. அங்கே வந்த கடைக்காரர், "என்ன சார், இந்த சிலை ரொம்ப தத்ரூபமா இருக்கா? இந்த சிலை வேணும்னா வாங்கிக்குங்க, விலை ஐநூறு ரூபாய் ஆனா,இந்த சிலைக்குப் பின்னால ஒரு கதை இருக்கு, அதை சொல்லனும்னா ஐயாயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.
"கதை எல்லாம் வேணாங்க, சிலை மட்டும் கொடுங்க" என்று சொல்லிவிட்டு அந்த சிலையை வாங்கிக்கொண்டு போனார் அவர்.
கொஞ்ச தூரம் போனதும் பார்த்தால்  இரண்டு எலிகள் அவர் பின்னால் வந்து கொண்டிருந்தன. இன்னும் கொஞ்சதூரம் போனதும், சுமார் நூறு எலிகள் வந்தன. இன்னும் கொஞ்சதூரம் போனதும் ஆயிரக் கணக்கான எலிகள் அணிவகுத்து வந்தன. பதறிப்போன அவர், அந்த எலியை ஒரு ஆற்றில் வீசி எறிந்தார். உடனே, எல்லா எலிகளும் அந்த ஆற்றில் விழுந்து உயிர் விட்டன. ஒரு நிமிடம் திகைத்த அவர் விடுவிடுவென்று அந்தச் சிற்பக் கடைக்கு போனார்.

கடைக்காரர் அவரைப் பார்த்து, "நீங்க வருவீங்கன்னு தெரியும், அந்த எலிசிலை பின்னால உள்ள கதை பத்திதான கேக்கப் போறீங்க?" என்று கேட்டார்.

அவர் சொன்னார், "அதெல்லாம் இல்லை, உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?"

டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கிறேன். பீ ரெடி! 

22 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சி.பி.செந்தில்குமார் said...

போட்றா முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா நல்லாருக்கு நண்பா

R.Gopi said...

//உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?"//

*******

ஹா...ஹா...ஹா...

தலைவா... எவ்ளோ விலைன்னு எனக்கும் சொல்லுங்க... நானும் என் பங்குக்கு கொஞ்சம் போடறேன்...

வெங்கட் said...

அது சரி.. அந்த கடைக்காரர் கிட்ட
மொக்கை போடுற பதிவர் சிலை
எதாவது இருக்கா..?!!

பெசொவி said...

வாங்க, செந்தில் வாழ்த்துகள் முத வெட்டுக்கு!
(வெட்டு அரசியல்வாதிக்குத் தான?}

பெசொவி said...

//R.Gopi said...
//உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?"//

*******

ஹா...ஹா...ஹா...

தலைவா... எவ்ளோ விலைன்னு எனக்கும் சொல்லுங்க... நானும் என் பங்குக்கு கொஞ்சம் போடறேன்...
//

ஹா....ஹா...நன்றி கோபி, விலை என்னனு தெரிஞ்சதும் சொல்றேன்.

பெசொவி said...

//வெங்கட் said...
அது சரி.. அந்த கடைக்காரர் கிட்ட
மொக்கை போடுற பதிவர் சிலை
எதாவது இருக்கா..?!!
//

உங்க போஸ்ட் படிச்சா யாரோ ஒருத்தர் வாங்கிட்டுப் போயிட்டாராம்.

middleclassmadhavi said...

ரசிக்கும்படியான பதிவு!

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ........ஹ ......மொக்கை இல்ல சார் .......நல்ல தான் இருக்கு .ஆனா இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு எழுதி இருக்கலாம் பதிவு ரொம்ப சின்னத இருக்கு

அனு said...

@வெங்கட்
//அது சரி.. அந்த கடைக்காரர் கிட்ட
மொக்கை போடுற பதிவர் சிலை
எதாவது இருக்கா..?!//

அப்படி சிலையை வாங்கிடாதீங்க.. தற்கொலை முயற்சின்னு உள்ள தூக்கி போட்டுற போறாங்க..

Chitra said...

அவர் சொன்னார், "அதெல்லாம் இல்லை, உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?"


...... ஜூப்பரு!!!!!!

Speed Master said...

கால்ங்காத்தால முதல் பதிவுலேயே கொடுமை

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html

vels-erode said...

உங்ககிட்ட வலைப் பதிவர் சிலை-ந்னு எதாச்சும் இருக்கா?......என்னது இருக்கா, ப்ளீஸ், ப்ளீஸ்...என்ன விலை? என்னது நேத்தே ஸ்டாக் மொத்தமும் வாங்க்கிட்டுப் போயிட்டங்களா?

ஸ்ரீராம். said...

கடைசி வரி..!

R. Gopi said...

பகடியின் உச்சம். இதை மொக்கை என்று சொல்லும் உங்களைக் கண்டிக்கிறேன்:-)

Madhavan Srinivasagopalan said...

// அவர் சொன்னார், "அதெல்லாம் இல்லை, உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?" //

அரசியல் வாதிக்கு சிலை இல்லையா.. யார் சொன்னது...?
காக்காயைக் கேளுங்கள்.. பதில் கிடைக்கும்..

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா சக்கை அப்பிடி போடு அருவாளை....

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கை இருக்கானு கேட்டு சொல்லுங்க இங்கே மொக்கை கூட்டம் பெருகிட்டே இருக்கு அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said... 4

அது சரி.. அந்த கடைக்காரர் கிட்ட
மொக்கை போடுற பதிவர் சிலை
எதாவது இருக்கா..?!!
///

வெங்கட் சிலை வேணும்...

எஸ்.கே said...

ரொம்ப காமெடி! நல்லாயிருக்குங்க!

Nagasubramanian said...

அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தான.
ஐயோ ஐயோ !

RAVINDRAN said...

அயோ தாங்க முடியலப்பா