அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, December 1, 2010

பதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)

முன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான்.

நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்குக் காரணமே இந்த பதினெட்டு வயது ஆனவர்கள்தான். குறிப்பா படிச்சவங்கதான்.எப்படின்னு கேக்கறீங்களா? "இந்த அரசாங்கம் சரியில்ல. இவன் ரொம்ப ஊழல் பண்றான், அவன் கோடி கோடியா சேர்த்துட்டான், ஒரு பயலும் சரியில்லப்பா, இந்த எலக்ஷனே  வேஸ்ட்" இப்படியெல்லாம் புலம்புவாங்களே தவிர ஒருத்தராவது இதுக்கு மூல காரணம் தான்னு புரிஞ்சுக்கரான்களா, இல்லவே இல்லை!

இப்ப சொல்றேன், நீங்க பதினெட்டு வயதுக்கு மேல ஆனவரா? முதல்ல வாக்காளர் பட்டியல்ல உங்க பேர் பதிவு பண்ணுங்க. எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. இவருக்குதான்னு நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தோனுற ஆளுக்கு வோட்டு போடுங்க. அப்புறம்  எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை குறை சொல்ல வாங்க.  முதல்ல நம்ம கடமையைச் செஞ்சுட்டுதான் அடுத்தவங்களை குறை சொல்லணும்.

வேற ஏதாவது இங்க எதிர்பார்த்து வந்த பதினெட்டு வயது ஆகாத "பெரிய"வங்களுக்கு: பதினெட்டு வயசு எப்ப முடியுதோ, அன்னிக்கே போய் உங்க பேரை வாக்காளர் லிஸ்ட்ல சேர்க்கற வழியப் பாருங்க. வருங்காலம் உங்களை நம்பித் தான் இருக்கு.

32 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
பதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)//

நல்லவேளை நான் படிக்கலை. எனக்கு -18

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்குக் காரணமே இந்த பதினெட்டு வயது ஆனவர்கள்தான். குறிப்பா படிச்சவங்கதான்.//

அப்படின்னா 18 வயசு ஆனவங்க எல்லாரும் படிச்சவங்களா? # டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//குறிப்பா படிச்சவங்கதான்//

அப்படின்னா குறிப்பில்லாம படிச்சவங்க?

எஸ்.கே said...

கேள்வி1: 18 வயசு முடிஞ்ச்வங்களெல்லாம் வாக்களர் அட்டை வைத்துள்ளார்களா?

கேள்வி 2: அப்படி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஓட்டு போடுகிறார்களா?

கேள்வி 3: அப்படி ஓட்டு போடுபவர்கள் நேர்மையாக ஓட்டு போடுகிறார்களா?

கேள்விகள் தொடரும்....

ஹரிஸ் said...

ரைட்டு...

Gopi Ramamoorthy said...

good post

Cable Sankar said...

nice

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said(asked)....
"கேள்வி 3: அப்படி ஓட்டு போடுபவர்கள் நேர்மையாக ஓட்டு போடுகிறார்களா? "//

ஹி.. ஹி.. தேர்லலுல நிக்கிறவங்க எல்லோரும், நேர்மையானவன்களா?
அதாம் பிராப்ளம்

இம்சைஅரசன் பாபு.. said...

கருத்துள்ள பதிவு பாதி பேர் voters லிஸ்ட் இல்லாதவங்க தான் psv ........அனால் அரசு இன்னொன்று செய்யலாம் .கலூரி படிப்பு முடிஞ்சி வரும் போதே வோடேர்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து கொள்ள வழிவகை செய்யலாம் ...இது என் கருத்து .மக்கள் வீணாக அலைய வேண்டாம்..........

Arun Prasath said...

என்னமோ எதிர் பாத்து
வந்தேன்... ஆனா நல்ல மெசேஜ்

நாகராஜசோழன் MA said...

அப்படியே எல்லோரும் எனக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்லிருக்கலாம்.

Jayadev Das said...

ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு அலையுரவங்களுக்கு வச்சீங்கையா ஆப்பு!

karthikkumar said...

நீங்க சொல்றது சரிதான். ஆனா மூணு தடவ எழுதி கொடுத்தும் வோட்டு மட்டும் எனக்கு தரவே மாட்றாங்க.

Madhavan Srinivasagopalan said...

//நாகராஜசோழன் MA said "அப்படியே எல்லோரும் எனக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்லிருக்கலாம்." //

மொதல்ல நீ நல்லவன்னு நிரூபி..
எப்படியா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது..

வெங்கட் நாகராஜ் said...

கருத்துள்ள பதிவு. பாதி படித்த இளைஞர்கள் வாக்கு அளிக்க செல்வதேயில்லை... நன்றி.

மங்குனி அமைச்சர் said...

அமைச்சர்களை குறை சொல்ல வாங்க///

athaana?? nalla kelunga sir

வெங்கட் said...

// எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா
க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. //

நாம தான் முதல் ஆள்னா
அப்ப எதுக்கு சார் க்யூல
நிக்கணும்.. # டவுட்டு

Jayadev Das said...

//நாம தான் முதல் ஆள்னா
அப்ப எதுக்கு சார் க்யூல
நிக்கணும்..// நியாயமான கேள்வி!

ப.செல்வக்குமார் said...

//முதல்ல வாக்காளர் பட்டியல்ல உங்க பேர் பதிவு பண்ணுங்க. எலக்சன் அன்னிக்கு முதல் ஆளா க்யூவில் நின்னு வோட்டு போடுங்க. //

அடடா ., ரொம்ப நல்ல விஷயம் .!!

சி.பி.செந்தில்குமார் said...

good

வெறும்பய said...

good post

தாராபுரத்தான் said...

தெரியாமத்தான் வந்துட்டேன்ங்க.

ஸ்ரீராம். said...

நல்ல மெசேஜ்.

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

தமிழ்மணத் தெரிவினுள் வந்தமைக்கும் என் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ம.தி.சுதா
மிக்க நன்றி!
நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏய்யா இப்படி ஏமாத்துற?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அலும்பு தாங்கல..ரத்த சரித்திரமா இருக்கு..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படம் கூட 18+ இல்ல..என்ன கொடுமை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்களுக்கு தோனுற ஆளுக்கு வோட்டு போடுங்க. அப்புறம் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை குறை சொல்ல வாங்க//
நிஜமாத்தன் சொல்றிங்களா..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

18 வயசு ஆகாதவன் எம்.எல்.ஏ வை எதுக்கு குறை சொல்றான்..மொக்கை ஃபிகரைத்தான் குறை சொல்வான்

R.Gopi said...

தல....

உங்க வயசு என்ன?

81க்கு மேலன்னா, இதை நீங்க படிக்கலாம்....